ADDED : பிப் 15, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலையில் வீறுகவியரசர் சிலை அடிக்கல் நாட்டியதற்கும், அரங்கிற்கு அவரது பெயர் வைத்ததற்கு பாராட்டு விழா மற்றும் நுால் வெளியீட்டு விழா நடந்தது.
பல்கலை துணைவேந்தர் ரவி தலைமை வகித்தார். வீறுகவியரசர் முடியரசனார் அவைக்கள நிறுவனர் பாரி முடியரசன் வரவேற்றார்.
அமைச்சர் பெரியகருப்பன், பொன்னம்பலஅடிகள் ஆகியோர் நுாலை வெளியிட்டனர். கலெக்டர் ஆஷா அஜித் மாணவர்களுக்கு பாராட்டு சான்றினை வழங்கினார்.
காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி, முன்னாள் அமைச்சர் தென்னவன் பங்கேற்றனர். செந்தமிழ்பாவை நன்றி கூறினார்.

