நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி; காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் சாக்கு மூடையுடன் நின்ற ஒருவரை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் நேற்று முன்தினம் இரவு காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் கம்ப்யூட்டர் மானிட்டர்களை திருடியது தெரியவந்தது.
காரைக்குடி போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தேவகோட்டையை சேர்ந்த விக்னேஸ்வரன் 39 என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் மனநலம் பாதித்தவர் என்பது தெரிய வந்ததால், போலீசார் அவரை ஜாமினில் விடுவித்தனர்.

