/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பறிமுதல் டூவீலர்கள் பிப்.18ல் ஏலம்
/
பறிமுதல் டூவீலர்கள் பிப்.18ல் ஏலம்
ADDED : பிப் 05, 2025 10:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கை மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு கைப்பற்றப்பட்ட 17 டூவீலர்கள் பிப்.18 காலை 10:00 மணிக்கு சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் எஸ்.பி., ஆஷிஷ் ராவத் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் பொது ஏலம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் ஆதார் அட்டை நகலுடன் கூடுதல் எஸ்.பி., மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே பொது ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.