UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 04:36 PM

திருப்புவனம்: திருப்புவனத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள போர்டுகளில் எழுத்துப்பிழை, கி.மீ., குறிப்பு உள்ளிட்டவை தவறாக இருப்பதால் வெளியூர் பயணிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஒவ்வொரு ஊருக்குள் நுழையும் இடங்களில் பெயர் பலகை, அடுத்து வரும் ஊர்கள், எவ்வளவு தூரத்தில் உள்ளது, செல்லும் பாதை, திரும்ப வேண்டிய இடம் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய போர்டு வைக்கப்பட்டுள்ளன.
திருப்புவனத்தைச் சுற்றியுள்ள பல இடங்களில் போர்டுகளில் எழுத்துப் பிழை மற்றும் தூரம் ஆகியவைகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதால் வெளியூர் பயணிகள் குழப்பமடைவதுடன் திட்டமிட்டபடி பயணம் செய்ய முடிவதில்லை.
திருப்புவனத்தில் இருந்து நரிக்குடி 35 கி.மீ., துாரம், ஆனால் நெடுஞ்சாலைத்துறை போர்டுகளில் 25 கி.மீ., என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல தேளி கிராம போர்டில் தெளி என குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்று பல இடங்களில் போர்டுகள் தவறாக உள்ளன. எனவே நெடுஞ்சாலைத் துறையினர் இவற்றை சரி செய்ய வேண்டும்.
