ADDED : பிப் 16, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி தெற்கு வட்டார காங்., சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. மாவட்டத் தலைவர் சஞ்சய் காந்தி தலைமை வகித்தார்.
தெற்கு வட்டாரத் தலைவர் வீரமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
சிவகங்கை லோக்சபா தொகுதியை இண்டியா கூட்டணியில் காங்.,கட்சிக்கு ஒதுக்க வேண்டும், மீண்டும் கார்த்திக்கு சீட் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ராமநாதன், முன்னாள் இளைஞரணி மாவட்ட தலைவர் கார்த்திக், திருப்புத்தூர் தொகுதி இளைஞர் காங்., செயலாளர் கார்த்தீஸ், வட்டாரத் துணைத் தலைவர் ராமையா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பையா பங்கேற்றனர்.