ADDED : அக் 08, 2024 04:56 AM

அ நிறம் | அளவு
தேவகோட்டை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேவகோட்டையில் காங்கிரஸ் சார்பில் எம். பி. கார்த்தி தலைமையில் ஊர்வலம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட தலைவர் சஞ்சய் வரவேற்றார். காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி முன்னிலை வகித்தார். கார்த்தி பேசுகையில், நாளை (இன்று) இந்த ஊர்வலம் நடந்திருந்தால் ஹரியானா காஷ்மீர் தேர்தலின் வெற்றி பேரணியாக அமைந்திருக்கும்.
ஹரியானாவில் மெஜாரிட்டி பெற்று காங்., தனித்தும், காஷ்மீரில் கூட்டணியோடு வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்கும். காங்., எங்கே என கேட்பவர்கள் தேவகோட்டை வந்து பார்க்கட்டும். காங்., வளர்ச்சி தெரிந்து இருக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் நகர தலைவர் சஞ்சய், மாநிலக் குழு உறுப்பினர் மீரா உசேன், மகேந்திரன், பூமிநாதன், பங்கேற்றனர்.
