ADDED : டிச 19, 2025 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: வேலை உறுதி திட்டத்தில் காந்தி பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து சிவகங்கையில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை அரண்மனைவாசல் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சஞ்சய் தலைமை வகித்தார். காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தனர். சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் சோனை, இளம்பரிதி, அப்பச்சிசபாபதி, ஒன்றிய தலைவர்கள் உடையார், மதியழகன், நகராட்சி கவுன்சிலர்கள் விஜயகுமார், புருசோத்தமன், மாவட்ட மகளிரணி தலைவி இமயமடோனா பங்கேற்றனர்.

