UPDATED : மே 08, 2026 06:05 PM
ADDED : மே 08, 2026 05:42 PM

அ நிறம் | அளவு
சிவகங்கை:த.வெ.க.,வை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழக கவர்னர் அர்லேக்கரை கண்டித்து சிவகங்கையில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளை த.வெ.க., பெற்றது. இந்த கட்சியை ஆட்சி அமைக்க தமிழக கவர்னர் அழைக்காததை கண்டித்து சிவகங்கையில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். காங்., மாவட்ட தலைவர் சஞ்சய் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மாநில மகளிரணி துணை தலைவர் ஸ்ரீவித்யா கணபதி, பொதுக்குழு சோனை, மாவட்ட மகளிரணி ஆரோக்கிய சாந்தாராணி, நகர் தலைவர் விஜயகுமார் உட்பட வட்டார, நகர, கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். ///
