/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டில்லி தேர்தலில் காங்., வெற்றி சிக்கல் என்கிறார் சிதம்பரம்
/
டில்லி தேர்தலில் காங்., வெற்றி சிக்கல் என்கிறார் சிதம்பரம்
டில்லி தேர்தலில் காங்., வெற்றி சிக்கல் என்கிறார் சிதம்பரம்
டில்லி தேர்தலில் காங்., வெற்றி சிக்கல் என்கிறார் சிதம்பரம்
ADDED : ஜன 19, 2025 02:27 AM
காரைக்குடி:''டில்லி சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெறுவது சிக்கல் தான். ஆனால் சில இடங்களிலாவது வெற்றி பெறும்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் கூறியதாவது:
இன்று மத்திய அரசின் சட்டத்தை போல் ஈ.வே.ரா., காலத்தில் சட்டம் இருந்திருந்தால் காவல்துறையால் அவர் வாழ்நாள் முழுவதும் சிறை வைக்கப்பட்டு இருப்பார். ஈ.வே.ரா., வை விமர்சிக்கும் சீமானுக்கு மக்களின் ஆதரவு அவர் பிறந்த ஈரோட்டில் நடைபெறும் தேர்தலில் தெரிந்துவிடும்.
டாலர் விலை உயர்வால் ஏற்றுமதியாளர்களுக்கு லாபமும் நுகர்வோருக்கு பாதிப்பும் பணவீக்கமும் ஏற்படும். டாஸ்மாக் வருமானம் அதிகரித்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதனை கொண்டாட முடியாது.
தமிழகத்தில் லாட்டரி விற்பனை தேவையில்லாதது. மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகரிக்க மத்திய அரசு வரும் பட்ஜெட்டில் சலுகைகளை தர வேண்டும்.
டில்லி சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெறுவது சிக்கல் தான். ஆனால் சில இடங்களையாவது கைப்பற்ற வேண்டும். இலங்கை அதிபர் சீனாவிற்கு பயணம் மேற்கொள்வதை சந்தேக கண்ணோடு பார்க்க வேண்டாம்.
அவர் முதலில் இந்தியாவிற்கு தான் வந்தார். 'இண்டியா' கூட்டணியில் த.வெ.க., இணையவேண்டும் என்ற தமிழக காங்., தலைவரின் கருத்து தவறில்லை என்றார்.

