ADDED : ஜன 22, 2024 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுகோல் மாயாண்டி சுவாமிக்கு புதிய வெள்ளி சூட்டுகோல், ஐம்பொன்சிலை பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
இங்கு, தினமும் அன்னதானமும், அமாவாசை, பவுர்ணமியன்று சிறப்பு பூஜை, ஆடியில் அவதார விழா நடைபெறும். இக்கோயில் பக்தர்கள் சார்பில் புதிதாக வெள்ளிசூட்டுகோல், ஐம்பொன்னாலான
மாயாண்டி சுவாமி சிலை, மயில் வாகனம் செய்து, கருப்பனேந்தல் மடத்தில்
தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரத்துடன், ராமலிங்கம் சுவாமி கோவிலுக்கு சென்றது. பின்னர் ரிஷப வாகனத்தில் ஐம்பொன் சிலை ஊர்வலமாக சென்று, பிரதிஷ்டை செய்தனர். விழா ஏற்பாட்டை பக்தர்கள் செய்திருந்தனர்.