நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : மதுரை மீனாட்சிபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சேவடைக்காரன் மகன் பாண்டியராஜன் 39. இவர் சிங்கம்புணரியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார். கடந்த 2 நாட்களாக உடம்பு சரியில்லை என்று கூறி வேலைக்கு செல்லாமல் மது குடித்துள்ளார்.
திண்டுக்கல் ரோட்டில் சர்ச் முன்பு போதையில் மயக்கத்திலேயே இறந்தார். அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பாண்டியராஜன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாண்டியராஜனுக்கு மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.