/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கட்டுமான தொழிலாளர் சங்கம் துவக்கம்
/
கட்டுமான தொழிலாளர் சங்கம் துவக்கம்
ADDED : ஆக 26, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; காளையார்கோவிலில் உடலுழைப்பு மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்க துவக்க விழா நடந்தது. மணிகண்டன் தலைமை வகித்தார்.
ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் ராஜா, சிவகங்கை மாவட்ட உடலுழைப்பு மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் காசிலிங்கம், விவசாய சங்க ஒன்றிய தலைவர் உடையார் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சாலையோர வியாபாரிகள் சங்க தலைவராக ராஜேஸ்வரி, செயலாளர் கொங்கேஸ்வரன், பொருளாளர் கலா தேர்வு செய்யப்பட்டனர். காளையார்கோவில் பஸ் ஸ்டாண்டில் குப்பை, கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. சாலையோர வியாபாரிகளை தொந்தரவு செய்வோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.