ADDED : ஜன 01, 2025 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை :  சிவகங்கை  வட்டார வளமையக் கூட்டரங்கில் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான கூட்டம் நடந்தது. மாவட்ட உதவித் திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ தலைமை வகித்தார். மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சேவற்கொடியோன் முன்னிலை வகித்தார். வானவில் மன்றக் கருத்தாளர் பாண்டிச்செல்வி வரவேற்றார்.
ஒருங்கிணைப்பாளர் சகாய பிரிட்டோ வானவில் மன்ற கருத்தாளர்களிடம் கலந்துரையாடி வழிகாட்டுதல்களை வழங்கினார். அமைப்புசார் வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரஹமத்நிஷா பயிற்சியை ஒருங்கிணைப்பு செய்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி அறிவியல் ஆய்விற்கான பயிற்சி அளித்தார்.

