நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் வானவில் மன்றம் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு சிவகங்கை ஒருங்கிணைந்த பள்ளிகல்வி அலுவலக கூட்டரங்கில் ஜனவரி வேலை அறிக்கை சமர்பித்தல் மற்றும் பிப். அறிவியல் பரிசோதனைகளை விளக்கும் பயிற்சி நடந்தது.
மாவட்ட உதவித் திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ கூட்டத்தை துவக்கி வைத்தார். கருத்தாளர் ஜெயபிரியா வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி அறிவியல் செய்முறைகளுக்கான நுணுக்கங்களை கூறினார். கருத்தாளர் பாண்டிசெல்வி நன்றி கூறினார்.