நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரையில் பணி செய்யும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு மானாமதுரை டி.எஸ்.பி., நிரேஷ், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., புருஷோத்தமன் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் வெளி மாநில தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்து ஏதேனும் தவறு நடைபெற்றால் உடனடியாக போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொள்ள வேண்டுமென அறிவுரை கூறினர்.