/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசுக்கு எதிராக தொடர் போராட்டம்; ஆசிரியர் கழக மாநில தலைவர் பேட்டி
/
அரசுக்கு எதிராக தொடர் போராட்டம்; ஆசிரியர் கழக மாநில தலைவர் பேட்டி
அரசுக்கு எதிராக தொடர் போராட்டம்; ஆசிரியர் கழக மாநில தலைவர் பேட்டி
அரசுக்கு எதிராக தொடர் போராட்டம்; ஆசிரியர் கழக மாநில தலைவர் பேட்டி
ADDED : நவ 10, 2024 11:18 PM
சிவகங்கை ; ''ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தமிழக அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்த உள்ளோம் ''என சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தமிழ்நாடு உயர்,மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சேதுசெல்வம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஆசிரியர் , அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம், ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே வழங்குவோம், ஈட்டிய விடுப்பை ஆண்டுதோறும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசிடம் ஒப்படைத்து ஊதியம் பெற்றுவந்த உரிமையை மீண்டும் அமல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி ஆட்சிக்கு வந்து 43 மாதங்கள் ஆன பின்பும் அதை நிறைவேற்றாத தி.மு.க., அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.
இப்போக்கை அரசு தொடர்ந்து கடைபிடித்தால் அரசுக்கு எதிராக மறியல், காத்திருப்பு, வேலை நிறுத்த போராட்டம், சென்னை கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவோம். அரசு, உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களை கற்பித்தல் பணியை செய்யவிடாமல், அவர்கள் மீது பணிச்சுமையை அளித்து, கற்றல் பணிக்கு தொடர்ந்து இடையூறு செய்யும் கல்வித்துறை தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் பணிகளை பார்வையிட உயரதிகாரிகள் இருக்கும்போது, கலெக்டர்களை ஈடுபடுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய தேர்வு நிலைக்கான சம்பள உயர்வை உடனே வழங்க வேண்டும் என்றார்.