
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் பட்டயமளிப்பு விழா நடந்தது.
காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் 2022-23ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டயமளிப்பு வழங்கும் விழா வளாகத்தில் நடந்தது.
முன்னாள் முதல்வர் சிவநேசன் மாணவர்களுக்கு பட்டயங்களை வழங்கினார். முதல்வர்சிவகாமி தலைமையேற்று பேசினார். சக்திவேல் வரவேற்றார். மின்னணுவியல் துறை தலைவர் பிருந்தா விருந்தினரை அறிமுகம்செய்து பேசினார். மின்னியல் துறை தலைவர் கீதா நன்றி கூறினார்.