
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : அமராவதிப்புதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லூரி செயலர் யதீஸ்வரி சாரதேஸ்வரி பிரியா அம்பா, யதீஸ்வரி ராமகிருஷ்ண பிரியா அம்பா தலைமையேற்றனர். முதல்வர் சிவசங்கரி ரம்யா வரவேற்றார். அழகப்பா பல்கலை., துணைவேந்தர் க.ரவி பட்டங்களை வழங்கினார். சாரதா நிகேதன் சமிதி ராமானந்த மகராஜ், யதீஸ்வரி சிவஞான பிரியா அம்பா பேசினர். பல்கலை., தரவரிசையில் 2வது இடம் பிடித்த கணினி அறிவியல் துறை மாணவி காயத்ரி, 4வது இடம் பிடித்த கணினி அறிவியல் தொழில்நுட்பவியல் துறை மாணவி பிரேமலதாவிற்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.

