/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டுறவு ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரேஷன் பொருள் வினியோகம் பாதிப்பு
/
கூட்டுறவு ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரேஷன் பொருள் வினியோகம் பாதிப்பு
கூட்டுறவு ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரேஷன் பொருள் வினியோகம் பாதிப்பு
கூட்டுறவு ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரேஷன் பொருள் வினியோகம் பாதிப்பு
ADDED : அக் 07, 2025 03:54 AM

சிவகங்கை: கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் 20 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட 25 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணி யாளர், ஓய்வு பணியாளர் சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கை இணை பதிவாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ச ர வணன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் நாகராஜன், மாவட்ட துணை தலைவர்கள் கோபிநாதன், பரமானந்தம், இணை செயலாளர் ராமசாமி, முத்துமாயாண்டி, ஓய்வு பெற்ற பணியாளர் சங்க தலைவர் பிரிட்டோ, செயலாளர் உடையப்பன், பொருளாளர் ராமசந்திரன், இணை செயலாளர்கள் தியாகராஜன், ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.
வேலைநிறுத்தம் மாவட்ட அளவில் 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் இடைய மேலுார், ஒக்கூர் சங்கங்கள் தவிர்த்து 123 சங்கங்கள் பூட்டப்பட்டன. இங்கு கிளார்க் முதல் செயலர் வரை 262 பேர் பணி புரிகின்றனர். இவர்களில் 8 பேர் மட்டுமே நேற்று பணிக்கு வந்தனர். எஞ்சிய 254 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
கூட்டுறவு துறையின் கீழ் மாவட்ட அளவில் முழு, பகுதி நேர ரேஷன் கடைகள் 856 செயல்படுகின்றன. இதில் பணிபுரியும் 557 விற்பனையாளர்களில் 184 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் நேற்று ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.