ADDED : அக் 01, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை அரசு உதவி பெறும் கானாடுகாத்தான் முத்தையா சுப்பையா செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் கீரங்குளத்துப்பட்டியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்து வருகிறது.
துவக்க விழாவில் தலைமையாசிரியர் மீனாட்சி வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை வடிவேல், மாவட்டத் தொடர்பு அலுவலர் சீனிராஜன் பேசினர். மாணவிகள் டெங்கு ஒழிப்பு, போதை ஒழிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். திட்ட அலுவலர்கள் சிவகாமி, தாமரைச்செல்வி ஆசிரியர்கள் காளிராசா, மருதுபாண்டி, தமிழ்கனல், பாண்டியம்மாள், டாக்டர் உமா பங்கேற்றனர்.