தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம்   போராட்டம்

சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம்   போராட்டம்

சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம்   போராட்டம்


ADDED : நவ 16, 2024 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2024 06:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மாவட்ட அளவில் அனைத்து அலுவலகங்கள் முன் சி.பி.எஸ்., ஒழிப்பு இயகத்தினர் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் மாநில அளவில் பழைய பென்ஷன் திட்டம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, கண்ணில் கருப்பு துணி கட்டி ஊழியர்கள் அனைத்து துறை அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து தாலுகா, ஊராட்சி ஒன்றியம், கருவூலகம், பேரூராட்சிகள் உதவி இயக்குனர், அறநிலையத்துறை, ஊரக வளர்ச்சி முகமை, காரைக்குடி கருவூலகம் உட்பட அனைத்து துறை அலுவலகங்கள் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லலில் நடந்த போராட்டத்திற்கு சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார்.

சிவகங்கையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், கோவிந்தன் உட்பட அந்தந்த அலுவலகங்கள் முன் கிளை நிர்வாகிகள் தலைமையில் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us