தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு

 கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு

 கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு


ADDED : ஏப் 18, 2026 05:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 05:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்துார்;சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு காரைக்குடியில் இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையான கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான மாவட்ட அணி வீரர்கள் தேர்வு இன்று காரைக்குடியில் நடைபெறுகிறது. காரைக்குடி அழகப்பா உடற்கல்வி பல்கலை மைதானத்தில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான சிவகங்கை மாவட்ட ஆடவர் அணி வீரர்கள் தேர்வு இன்று காலை 6:45 மணி அளவிலும், 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணி வீரர்கள் தேர்வு மதியம் 3:30 மணி அளவிலும் நடைபெறுகிறது.

அணி தேர்வில் கலந்து கொள்ள வரும் வீரர்கள் வெள்ளை சீருடை,ஷு அணிந்து வரவேண்டும். கிரிக்கெட் உபகரணங்களை தாங்களே கொண்டு வர வேண்டும். ஆதார் நகல் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு சி.சிவகுமார், இணைச்செயலாளர், சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் 94424 33334 ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us