/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில்வே போலீசுக்கு வெட்டு திணறும் போலீஸ்
/
ரயில்வே போலீசுக்கு வெட்டு திணறும் போலீஸ்
ADDED : பிப் 22, 2024 12:09 AM

காரைக்குடி, -காரைக்குடி அருகே ரயில்வே போலீஸ்காரரை வாளால் வெட்டி விட்டு, தப்பியோடியவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூர் உதயம் நகரை சேர்ந்தவர் நாகேந்திரன் மகன் பாலசுப்பிரமணியம் 45. ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
இவர் பிப்.17ம் தேதி அழகப்பா இன்ஜி., கல்லூரிபின்புறம் கண்டனுார் ரோட்டில், பைக்கில் வந்த போது மூன்று பேர் பாலசுப்பிரமணியத்தை அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். காரைக்குடி போலீசார் தப்பியவர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மூவரும் ஹெல்மெட் அணிந்து பைக்கில் சென்றது தெரியவந்துள்ளது. பைக் நம்பர் சரியாக பதிவாகாததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. விரைவில் குற்றவாளிகளைப் பிடிப்பதோடு சம்பவத்திற்கான காரணம் தெரிய வரும் என்றனர்.