/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் பட்டியலின கல்லுாரி மாணவருக்கு வெட்டு தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் விசாரணை
/
மானாமதுரையில் பட்டியலின கல்லுாரி மாணவருக்கு வெட்டு தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் விசாரணை
மானாமதுரையில் பட்டியலின கல்லுாரி மாணவருக்கு வெட்டு தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் விசாரணை
மானாமதுரையில் பட்டியலின கல்லுாரி மாணவருக்கு வெட்டு தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் விசாரணை
ADDED : பிப் 18, 2025 06:14 AM

சிவகங்கை : மானாமதுரை அருகே மேலப்பிடாவூரில் கல்லுாரி மாணவர் கை வெட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய எஸ்.சி.,எஸ்.டி., ஆணைய இயக்குனர் எஸ்.ரவிவர்மன் விசாரணை நடத்தினார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மேலப்பிடாவூர் ராமன் மகன் அய்யாச்சாமி 19. பட்டியலினத்தை சேர்ந்த இவர் சிவகங்கை அரசு மன்னர் துரைசிங்கம் கல்லுாரியில் பி.எஸ்சி., 3ம் ஆண்டு படிக்கிறார். பிப்., 12ம் தேதி கல்லுாரி சென்றுவிட்டு, அன்று மாலை 6:30 மணிக்கு புல்லட்டில் உறவினர் பொன்முத்துவுடன் கிராமத்திற்குள் சென்றார். பொன்முத்துவை அவரது வீட்டில் இறக்கிவிட்டு, தனது வீட்டிற்கு டூவீலரில் சென்றார்.
அங்கு நின்றிருந்த மேலப்பிடாவூர் செல்லச்சாமி மகன் வினோத்குமார் 20, அரியசாமி மகன் ஆதீஸ்வரன் 23, வல்லரசு 24 மூன்று பேரும் சேர்ந்து ஜாதியை சொல்லி தகாத வார்த்தையால் திட்டி, அய்யாச்சாமியிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அய்யாச்சாமியின் கைகளில் வினோத்குமார் வெட்டினார். காயமுற்ற அய்யாச்சாமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிப்காட் போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் 3 பேரையும் கைது செய்தனர்.
இது விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியலினத்தவர் ஆணைய இயக்குனர் எஸ்.ரவிவர்மன் தலைமையில் குழுவினர் நேற்று காலை மேலப்பிடாவூரில் அய்யாச்சாமியின் தந்தை ராமன், தாய் செல்லம்மாள் ஆகியோரிடம் விசாரித்தனர்.
பின்னர் மாவட்ட நிர்வாகம் வழங்கிய நிவாரண தொகை ரூ.62,500 க்கான உத்தரவை வழங்கினர்.பின்னர் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆஷா அஜித், எஸ்.பி., ஆஷிஷ் ராவத் ஆகியோரிடம் ஆலோசனை செய்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள அய்யாச்சாமியிடமும் விசாரணை செய்தனர்.