/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிலம்ப போட்டி: மாணவிக்கு பாராட்டு
/
சிலம்ப போட்டி: மாணவிக்கு பாராட்டு
ADDED : ஜன 25, 2024 05:14 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ. இவர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மானானமதுரை சி.எஸ்.ஐ., உயர்நிலைப்பள்ளியில் நடந்த வருவாய் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஜன.,20ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த மாநில சிலம்ப போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். அரியலுார் மாவட்டத்தில் நடந்த மாநில சிலம்ப போட்டியில் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். தொடர்ந்து பதக்கங்களை பெற்ற ஜெயஸ்ரீயை தலைமை ஆசிரியர் சிவமணி, உடற்கல்வி இயக்குநர் ராமசாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் லட்சுமி, செல்வராணி, மாணவர்கள் பாராட்டினர்.
காரைக்குடி
ராணிப்பேட்டையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின மற்றும் பாரதியார் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடந்தது. அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தேசிகா மூன்றாமிடத்தை பெற்றார்.
மாணவி தேசிகா மற்றும் பயிற்சியாளர் சவுந்தர பாண்டியனை பள்ளி தலைமயாசிரியர் பிரிட்டோ, ஊராட்சி தலைவர் சுப்பையா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர்.