ADDED : மே 01, 2025 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மேலராங்கியன் கிராமத்தில் கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாட்டிற்கு வரும்முன்னரே சேதமடைந்தது.
துாய்மை பாரத இயக்கம் சார்பில் மேலராங்கியன் கிராமத்தில் ஆறு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் சமுதாய கழிப்பறை கட்டப்பட்டது. 2023ம் ஆண்டு கட்டப்பட்ட கழிப்பறை இன்னமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. அதற்கு முன்னரே கட்டடம் பல இடங்களில் சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் உள்ளது.
மத்திய அரசு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டினாலும் அதிகாரிகள் போதிய கண்காணிப்பில் இல்லாததால் தரமற்ற கட்டடங்கள் கட்டி யாருக்கும் பயனின்றி அரசு பணம் விரயமாகி வருகிறது.

