/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் பலத்த காற்று விழுந்த மரத்தால் பாதிப்பு
/
திருப்புத்துாரில் பலத்த காற்று விழுந்த மரத்தால் பாதிப்பு
திருப்புத்துாரில் பலத்த காற்று விழுந்த மரத்தால் பாதிப்பு
திருப்புத்துாரில் பலத்த காற்று விழுந்த மரத்தால் பாதிப்பு
ADDED : அக் 16, 2025 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார், : திருப்புத்துாரில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்கிறது. மேகமூட்டம், தூறலுடன் இருப்பதால் வெப்பம் தணிந்து குளிர்ந்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை துாறலுடன் பெய்தது.
நள்ளிரவில் வீசிய காற்றில் கோர்ட் அருகில் நின்ற பழமையான புளியமரம் வேரோடு முறிந்து சாய்ந்தது. சிவகங்கை ரோட்டில் குறுக்கே விழுந்ததால் வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதித்தது. காலையில் நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர்.