/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சேதமடைந்த ரோடு: அரசு பஸ் வர மறுப்பு
/
சேதமடைந்த ரோடு: அரசு பஸ் வர மறுப்பு
ADDED : அக் 16, 2024 05:21 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சேம்பார் கிராமத்திற்கு செல்லக்கூடிய ரோடு ஆனது முழுவதும் சேதம் அடைந்து இருப்பதால் அரசு பஸ் வர மறுப்பதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது சேம்பார் . இந்த கிராமத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
சிவகங்கையில் இருந்து சாத்தரசன்கோட்டை, சிரமம், மணக்குடி வழியாக அரசு பஸ் தினசரி காலை 6:15 மணிக்கு புறப்பட்டு சேம்பாருக்கு 7:20 சென்றடையும். மீண்டும் 8:10 மணிக்கு சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் வரும். இதே போல் மாலையில் 5:00 மணிக்கு சிவகங்கையில் புறப்பட்டு சேம்பார் சென்று மீண்டும் சிவகங்கை வரும்.
காலையும் மாலையும் சென்ற பேருந்து தற்போது மழைக்காலம் என்பதால் சேம்பார் கிராமத்திற்கு செல்லாமல் சிரமம் விலக்கோடு திரும்பி விடுகிறது. இதனால் சேம்பார் கிராம மாணவர்கள் 5 கிலோ மீட்டர் துாரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
சிரமம் ஊராட்சி1வது வார்டு கவுன்சிலர் பவித்ரா மணிமாறன் கூறுகையில், சேம்பார், மணக்குடி, சோமநாதபுரம், கடம்பங்குடி, நந்தனுார் ஆகிய கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட பள்ளி கல்லுாரி மாணவர்கள் சிவகங்கையில் படித்து வருகின்றனர்.
இந்த பஸ் வராததால் இந்த மாணவர்கள் அனைவரும் நடந்து சென்று சிரமம் விலக்கில் பஸ் ஏறவேண்டிய சூழல் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்துள்ள இந்த சாலையை சீரமைத்து அரசு பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.