/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் ஆறே மாதத்தில் சேதமான கிராமப்புற ரோடுகள்
/
திருப்புவனத்தில் ஆறே மாதத்தில் சேதமான கிராமப்புற ரோடுகள்
திருப்புவனத்தில் ஆறே மாதத்தில் சேதமான கிராமப்புற ரோடுகள்
திருப்புவனத்தில் ஆறே மாதத்தில் சேதமான கிராமப்புற ரோடுகள்
ADDED : அக் 14, 2024 09:01 AM

திருப்புவனம் : திருப்புவனத்தில் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் போடப்பட்ட தார்ரோடுகள், ஆறே மாதத்தில் சேதமடைந்துள்ளது.
திருப்புவனம் அருகே முக்குடி ஊராட்சியில் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், எஸ்.நாங்கூர் முதல் எம்.பறையன்குளம் வரை 2 கி.மீ., துாரத்திற்கு ரூ.51.59 லட்சம் செலவில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தார்ரோடு போடப்பட்டது.
இந்தரோட்டை அடுத்த 5 ஆண்டிற்கு சாலையை பராமரிக்க ரூ.7.20 லட்சம் ஒதுக்கப்பட்டது.
கடந்த ஏப்ரலில் தார்ரோடு பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் தார்ரோடு அமைத்து ஆறே மாதங்களில் இந்த ரோடு முற்றிலும் சேதமடைந்துள்ளது.
வாகனங்களில் செல்வோர் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த ரோட்டை பறையன்குளம், முக்குடி மட்டுமின்றி விருதுநகர், மதுரை மாவட்டம் செல்வோரும் பயன்படுத்துவர். மீண்டும் இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.