/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களால்அபாயம்: அப்படியே விட்டுச் செல்லும் ஒப்பந்ததாரர்கள்
/
குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களால்அபாயம்: அப்படியே விட்டுச் செல்லும் ஒப்பந்ததாரர்கள்
குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களால்அபாயம்: அப்படியே விட்டுச் செல்லும் ஒப்பந்ததாரர்கள்
குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களால்அபாயம்: அப்படியே விட்டுச் செல்லும் ஒப்பந்ததாரர்கள்
ADDED : ஜூலை 21, 2024 04:55 AM

திருப்புவனத்தில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் 16 கோடி ரூபாய் செலவில் 18 வார்டுகளிலும் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கும்மேலாக பணிகள் நடந்து வரும் நிலையில் நகரின் பல இடங்களிலும் பேவர் பிளாக் சாலை, சிமென்ட் சாலை, தார்ச்சாலை பெயர்த்து எடுக்கப்பட்டு குழாய் பதிப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளது.
இந்திரா நகர், ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடக்கவே முடியவில்லை. முதியோர்கள், மாணவர்கள் என பலரும் தினசரி பள்ளங்களில் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். தெருக்களில் தோண்டப்பட்ட பள்ளங்களை சரி செய்யாமல் ஒப்பந்ததாரர்கள் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி குழாய் பதிக்க தொடங்கியுள்ளனர்.
கோர்ட் வாசலில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாமல் 15 அடி நீளத்திற்கு அப்படியே விட்டு விட்டனர். கோர்ட்டிற்கு வந்த ஊழியர்கள், போலீசார் என பலரும் பள்ளத்தை கடக்க முடியாமல் அவதிப்பட்டனர். இதனை யடுத்து பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் ஒரு பகுதியில் மட்டும் நடந்து செல்ல வசதியாக பள்ளத்தை சரி செய்தனர்.
நகரின் பல பகுதிகளிலும் குடிநீர் குழாய் பதிப்பு பணி முழுமையடையாமல் பாதியில் உள்ளது. 16 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் பணிகளை முழுமையாக மேற்கொள்ளாத நிலை உள்ளது. அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளங்களை பேரூராட்சி பணியாளர்கள் மூலம் மேற்கொள்வதால் நகரில் துாய்மை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
துாய்மை பணியாளர்கள்குழாய் பதிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதால் நகரில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை தான் குப்பை அள்ளப்படுகின்றன. தெருக்களில் குப்பை தேங்கி சுகாதாரக்கேடு நிலவி வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் குழாய் பதிக்கும் பணியில் துாய்மை பணியாளர்கள் ஈடுபடுத்துவதை தடுத்து ஒப்பந்ததாரர்கள் விரைந்து பணிகளை முடிக்க வலியுறுத்த வேண்டும்.