ADDED : ஜன 28, 2026 05:43 AM

அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டை அருகே அதங்குடி கிராமத்தில் ஊரணி அருகிலேயே மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் 2015 ல் ரூ 44 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு உள்ளது. தொட்டியில் இருந்து தண்ணீர் கசிந்து ஊரணி நிறைந்து வருகிறது.
தற்போது 10 ஆண்டு தான் ஆகின்றன. அதற்குள் மேல்நிலைத் தொட்டி முற்றிலும் உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
அடிமட்ட கான்கிரீட் துாணில் இருந்து, மேல்நிலை குடிநீர் தொட்டி வரை கான்கிரீட் சிமென்ட் உடைந்து நொறுங்காத இடமே இல்லை. எந்த நேரமும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதுவும் ரோட்டோரம் அமைந்திருப்பதால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர்.
