/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டிச. 20 சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம்
/
டிச. 20 சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : டிச 18, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிச., 20 அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம் காலை 10:30 மணிக்கு துவங்குகிறது. தனியார் வேலை அளிக்கும் தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையானவர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த வாய்ப்பினை வேலை கிடைக்காத இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த முகாமில் இலவச தொழில் திறன் பயிற்சி, போட்டி தேர்வுக்கான பயிற்சிகளுக்கு சேர்க்கையும் நடக்கிறது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவி தொகை பெற விண்ணப்பமும் வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் கல்வி சான்று, ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் பங்கேற்கலாம்.