/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்ணங்குடியில் எண்ணெய் பனை கன்று மானியத்தில் வழங்க முடிவு
/
கண்ணங்குடியில் எண்ணெய் பனை கன்று மானியத்தில் வழங்க முடிவு
கண்ணங்குடியில் எண்ணெய் பனை கன்று மானியத்தில் வழங்க முடிவு
கண்ணங்குடியில் எண்ணெய் பனை கன்று மானியத்தில் வழங்க முடிவு
ADDED : டிச 12, 2025 05:44 AM
சிவகங்கை: கண்ணங்குடியில் முழு மானியத்தில் விவசாயிகள் எண்ணெய் பனை கன்றுகள் பெறலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜோமி அபி கெயில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தேசிய சமையல் எண்ணெய் இயக்க திட்டம் மூலம் விவசாயிகள் ஏற்றம் பெறும் வகையில் ஒரு எக்டேருக்கு 143 எண்ணெய் பனை கன்றுகள் வீதம் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். எண்ணெய் பனை பயிரிட 21 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பம், 75 முதல் 100 சதவீத ஈரப்பதம், வறண்ட காலங்களில் 150 முதல் 300 லிட்டர் வரை ஒரு கன்றிற்கு தண்ணீர் அத்தியாவசிமானது.
எண்ணெய் பனையானது சாகுபடி செய்யப்பட்ட நான்காம் ஆண்டில் இருந்தே அறுவடைக்கு தயாராகும். 4 ஆண்டிற்கு பின் எக்டேருக்கு 5 டன் வரை நிலையான மகசூல் கிடைக்கும். தோட்டக்கலைத்துறை மூலம் 100 சதவீத நடவு பொருள் வழங்குவதோடு, 3 ஆண்டு விவசாயிகள் பயனடையும் வகையில் பராமரிப்பிற்காகவும், ஊடுபயிர் சாகுபடி செய்யவும் வழிகாட்டு நெறிமுறைப்படி எக்டேருக்கு ரூ.10,500 ஊக்கத்தொகை வழங்கப்படும். கண்ணங்குடி ஒன்றியத்தில் இந்த ஆண்டில் 8.6 எக்டேரில் எண்ணெய் பனை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியமும் தரப்படும். கண்ணங்குடி ஒன்றிய விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.

