ADDED : பிப் 12, 2025 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் தைப்பூசத்தையொட்டி ஏராளமானோர் காத்திருந்து பத்திரங்கள் பதிவு செய்தனர்.
காரைக்குடியில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை வளாகத்தில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது. முகூர்த்த நாட்களிலும், முக்கிய நாட்களிலும் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கும் என அரசு அறிவித்திருந்தது. இந்நாட்களில் கூடுதலாக டோக்கன் வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடைபெறுகிறது.
தைப்பூசத் திருநாளான நேற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் விறுவிறுப்பாக பத்திரப்பதிவு டோக்கன் வழங்கப்பட்டு முறைப்படி நடந்தது.
பிப்.2 ஆம் தேதி விடுமுறை நாளில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படும் என்று தெரிவித்த நிலையில் பத்திரப்பதிவு அலுவலர்கள் பணி புறக்கணிப்பு செய்தனர். ஆனால், விடுமுறை நாளான நேற்று பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டது.