தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/இளையான்குடி, மானாமதுரை போலீஸ் ஸ்டேசன்களில் பற்றாக்குறை; தேர்தல், கோயில் விழா காலங்களில் பாதுகாப்பு சிக்கல்

இளையான்குடி, மானாமதுரை போலீஸ் ஸ்டேசன்களில் பற்றாக்குறை; தேர்தல், கோயில் விழா காலங்களில் பாதுகாப்பு சிக்கல்

இளையான்குடி, மானாமதுரை போலீஸ் ஸ்டேசன்களில் பற்றாக்குறை; தேர்தல், கோயில் விழா காலங்களில் பாதுகாப்பு சிக்கல்


UPDATED : பிப் 17, 2026 08:03 AM

ADDED : பிப் 17, 2026 07:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 17, 2026 08:03 AM ADDED : பிப் 17, 2026 07:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் எண்ணிக்கை பற்றாக்குறையாக உள்ளதால் வரவுள்ள தேர்தல், கோயில் திருவிழா காலங்களில் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மானாமதுரை போலீஸ் சப் டிவிசனுக்கு உட்பட்டு மானாமதுரை, சிப்காட், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், பழையனுார், பூவந்தி உள்ளிட்ட 6 போலீஸ் ஸ்டேஷன் களிலும், சிவகங்கை சப் டிவிசனுக்கு உட்பட்ட இளையான்குடி, சாலைக்கிராமம் உள்ளிட்ட 2 போலீஸ் ஸ்டேஷன் களிலும் போதிய எண்ணிக்கையில் போலீசார் இல்லாமல் பற்றாக்குறையாக உள்ளது.

இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல், கோயில் திருவிழா மற்றும் பங்குனி பொங்கல் விழா நடைபெற உள்ளது. ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் எண்ணிக்கை பற்றாக்குறையாக உள்ள நிலையில் அயல் பணி, கோர்ட், முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக போலீசார் சென்று விடுகின்ற நிலையில் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் அன்றாடம் நடைபெறும் பிரச்னைகள் மற்றும் விபத்துக்கள்,கோயில் திருவிழாக்கள், போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களும் தினந்தோறும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. இரவு நேரங்களில் ரோந்து பணி முழுமையாக இல்லாத காரணத்தினால் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் சர்வ சாதாரணமாக போலீஸ் பயமில்லாமல் திருட்டு சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிய போதிய போலீசாரை நியமனம் செய்ய வேண்டுமென உயர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

கடந்த சில வருடங் களாக பணி ஓய்வு பெற்ற போலீசார்களுக்கு பதிலாக புதிய போலீசாரை அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் களில் நியமனம் செய்வது கிடையாது.மேலும் ஏற் கனவே பணிபுரிந்த போலீசார் வேறு ஸ்டேஷன் களுக்கு இட மாறுதலில் சென்ற பிறகு அவர் களுக்கு பதிலாக போலீசார் நியமனம் செய்யப்படாமல் உள்ள காரணத்தினால் ஸ்டேஷன்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பணியாற்றும் போலீசார் அதிக வேலைப்பளு காரணமாக மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.

காவல்துறை உயர் அதிகாரிகள் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மற்றும் கோயில் திருவிழா பங்குனி பொங்கல் விழா நடைபெற உள்ள நிலையில் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தேவையான போலீசாரை நியமிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us