/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அடங்கல் கிடைப்பதில் தாமதம் பயிர் காப்பீடு செய்வதில் சிக்கல்
/
அடங்கல் கிடைப்பதில் தாமதம் பயிர் காப்பீடு செய்வதில் சிக்கல்
அடங்கல் கிடைப்பதில் தாமதம் பயிர் காப்பீடு செய்வதில் சிக்கல்
அடங்கல் கிடைப்பதில் தாமதம் பயிர் காப்பீடு செய்வதில் சிக்கல்
ADDED : நவ 03, 2024 05:48 AM
காரைக்குடி: காரைக்குடி தாலுகாவில், விவசாயிகளுக்கு அடங்கல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயிர் காப்பீடு செய்வதில் சிக்கல் நிலவுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் நெற்பயிர்களுக்கு நவ.15 வரை விவசாயிகள் பதிவு செய்யலாம் என வேளாண்துறை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு விவசாயிகள் அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,விடம் பெற்ற அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இ சேவை மையங்களிலோ தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பிரீமியம் செலுத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்.
அடங்கல் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் நேரடியாக சென்று வயல்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு அடங்கல் வழங்க வேண்டும்.
அடங்கல் பெற்ற பின்பே விவசாயிகள் பயிர் காப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும். செப்.15 ஆம் தேதி முதல் அடங்கல் வழங்குவதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இந்நிலையில், காரைக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட
அரியக்குடி, கூத்தலூர், பிளார், வாரிவயல், கழனிவாசல், செஞ்சை
உட்பட பல பகுதிகளில் அடங்கல் வழங்குவதற்கான எந்த பணியும் மேற்கொள்ளப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. தற்போது அரசு விடுமுறை உட்பட பல்வேறு விடுமுறை காரணமாக பல்வேறு பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது. விடுமுறை காரணமாக தற்போது அடங்கல் பெற்றால் தான், விவசாயிகள் பயிர் காப்பீட்டிற்கு சரியான நேரத்தில் விண்ணப்பிக்க முடியும்.
இல்லையென்றால் காப்பீடு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே, விவசாயிகளுக்கு விரைந்து அடங்கல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தாசில்தார் ராஜா கூறுகையில்:
அந்தந்த பகுதிகளில், வி.ஏ.ஓ., நேரடியாக சென்று பார்வையிட்டு உரிய காலத்தில் அடங்கல் வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாகும் பகுதிகளில் விரைந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.