/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராம ஊராட்சிகளில் தெருவிளக்கு குடிநீர் குழாய் பராமரிப்பு பணி தாமதம்
/
கிராம ஊராட்சிகளில் தெருவிளக்கு குடிநீர் குழாய் பராமரிப்பு பணி தாமதம்
கிராம ஊராட்சிகளில் தெருவிளக்கு குடிநீர் குழாய் பராமரிப்பு பணி தாமதம்
கிராம ஊராட்சிகளில் தெருவிளக்கு குடிநீர் குழாய் பராமரிப்பு பணி தாமதம்
ADDED : ஆக 30, 2025 11:43 PM
திருப்புத்துார்: ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு சம்பந்தப்பட்ட பராமரிப்புப் பணிகள் தேக்கமடைவதாக கிராமத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஊராட்சிக்கு குறைந்த பட்ச நிதி ஒதுக்கீடு ஆண்டிற்கு ரூ. 7 லட்சம். இது பெரும்பாலும் மின் கட்டணத்திற்கு சென்று விடுகிறது. இந்த ஒதுக்கீடு தற்போது முழுமையாக வரவில்லை. இதனால் பொது நிதியிலிருந்து மின் கட்டணம் செலுத்துகின்றனர்.
மானிய நிதிக்குழு மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஊராட்சிகளிடம் நிதி இருப்பை பொறுத்தே நிதி ஒதுக்கீடு செய்கிறது. முறையாக வரி வசூலித்து இருப்பு வைத்துள்ள ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைந்து விடுகிறது. இதனால் சம்பளத்திற்கு மட்டுமே அந்த நிதி செல்கிறது.
தெருவிளக்கு, மின் மோட்டார் பராமரிப்பு, சுகாதார பணிக்கு நிதியின்றி பற்றாக்குறை நிலவுகிறது. ஊராட்சிகளில் தலைவர்கள் இல்லாததால், அந்தந்த ஊராட்சி செயலர்கள், பி.டி.ஓ.,க்களிடம் அனுமதி பெற்று தான் பணிகளை செய்ய வேண்டும். இதற்காக முடிவெடுக்க முடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது.
மேலும் நிதி ஒதுக்கீடு சார்ந்த அனுமதியை பி.டி.ஓ.,க்களே பார்ப்பதால், இழுபறிநிலை நீடிக்கிறது. எனவே பணிகளை பகிர்ந்து அளித்து, கிராம ஊராட்சிகளில் தெருவிளக்கு, குடிநீர் குழாய் பராமரிப்பு போன்றவை மேற்கொள்வதில் இழுபறி நிலை நீடிக்கிறது.

