/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வீடுகள் தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கல் வாகன வாடகை: விற்பனையாளர்கள் தவிப்பு
/
வீடுகள் தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கல் வாகன வாடகை: விற்பனையாளர்கள் தவிப்பு
வீடுகள் தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கல் வாகன வாடகை: விற்பனையாளர்கள் தவிப்பு
வீடுகள் தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கல் வாகன வாடகை: விற்பனையாளர்கள் தவிப்பு
ADDED : ஆக 14, 2025 11:17 PM
சிவகங்கை, ; சிவகங்கை மாவட்டத்தில் வீடுகள் தோறும் ரேஷன் பொருட்கள் கொண்டு செல்வதற்கான வண்டி வாடகை குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்காததால் விற்பனையாளர்கள் தயங்குகின்றனர்.
தமிழகத்தில் ஆக.,12 முதல் 79 வயதிற்கு மேற்பட்டோர், ஆதரவின்றி இருக்கும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை அரசு துவக்கியது. இத்திட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இத்திட்டம் மூலம் 33,294 ரேஷன் கார்டுகளை சேர்ந்த 65,690 குடும்ப உறுப்பினர்கள் பயன் பெறுகின்றனர்.
தயங்கும் விற்பனையாளர்கள் இத்திட்டத்தின்படி மாதந்தோறும் 2 வது சனி, ஞாயிறு மட்டுமே வீட்டிற்கே சென்று பொருட்கள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
ஆனால், இத்திட்டம் துவங்கிய ஆக., 12 ம் தேதி முதல் தொடர்ந்து விற்பனையாளர்கள் வாடகை மினி சரக்கு வேனில் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை பயனாளிகள் வீடுகளுக்கு எடுத்து சென்று, வினியோகம் செய்கின்றனர்.
கூட்டுறவு துறை நிர்வாகம் வழங்கிய பயனாளிகள் பட்டியலில் பெரும்பாலான வீடுகளில் அவர்கள் இல்லாமல், ஏமாற்றத்துடன் திரும்பி வருவதாக தெரிவிக்கின்றனர்.
அதே போன்று மினி சரக்கு லாரியில் கடையில் இருந்து எடுத்து சென்று விற்பனைக்கு பின் எஞ்சிய பொருட்களை மீண்டும் கடைக்கு வந்து இறக்கி வைக்க வேண்டும். இதற்காக நாள் ஒன்றுக்கு வண்டி வாடகை ரூ.3,000, ஏற்று, இறக்கு கூலி ரூ.500 வரை செலவாகிறது.
இந்த செலவின தொகையை யாரிடம் கேட்பது என தெரியாமல் விற்பனையாளர்கள் தவித்து வருகின்றனர்.
அதே நேரம் அதிகாரிகளும் இது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
செலவின தொகையை எப்படி ஈடுகட்டுவது என தெரியாமல் விற்பனையாளர்கள் தவித்து வருகின்றனர். இது தவிர வீடுகள் தோறும் பொருட்களை வழங்க விற்பனையாளர்கள் சென்றுவிட்டால், ரேஷன் கடை பூட்டி இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அரசு, இத்திட்டத்திற்கான வண்டி வாடகையை விற்பனையாளர்களுக்கு விடுவிப்பது குறித்து தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

