ADDED : அக் 08, 2024 04:53 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளித் திட்டத்தில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்ட அனைத்து வகை பணியாளர்களுக்கு செப்., ஊதியம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது.
மாநில அமைப்பு செயலாளர் குமரேசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் யுவராஜ், வைகைபிரபா, மாவட்ட தலைவர் கருப்புச்சாமி, செயலாளர் வின்சென்ட்பவுல், மாவட்ட பொருளாளர் பால சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.
