நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அரசு போக்குவரத்து கழகம் காரைக்குடி கிளை முன்பு ஏ.ஐ.டி.யு.சி.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கிடவும் ஒப்பந்த முறையில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதை நிறுத்தவும்,காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மண்டல தலைவர் சுப்பிரமணியன் தலைமை ஏற்றார்.பொதுச்செயலாளர் விஜயசுந்தரம் முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் மணவழகன்,ஏ.ஐ.டி.யு.சி மாநில உள்ளாட்சி தலைவர் ராமச்சந்திரன்,மாவட்டச் செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.