/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மின்வாரிய அலுவலகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மின்வாரிய அலுவலகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 22, 2025 03:44 AM
காரைக்குடி: கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நற்கனி நகரில் தெருவிளக்கு அமைக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஊராட்சி அலுவலகம், மின் வாரிய அலுவலகத் தில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனைக் கண்டித்து நற்கனி நகர் பகுதி மக்கள் மற்றும் இ.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கல்லல் மின்வாரிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இ.கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா, ஒன்றிய செயலாளர் குணாளன், ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்டச் செய லாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்ததோடு, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து விரைவில் மின்விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.