ADDED : மார் 05, 2026 05:39 AM
தேவகோட்டை: புளியாலில் கிராம விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் சூசை மாணிக்கம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் 2025- -2026ல் போதிய மழை பெய்யாததால் விவசாய பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு, பயிர் கடன் தள்ளுபடி, இன்சூரன்ஸ் வழங்க வேண்டும். முடங்கி போன காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும், கோர்ட் உத்தரவுப்படி சீமை கருவேல மரங்களை அகற்றிட வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். தேசிய நதிகள் இணைப்பு சங்க மாவட்ட கவுரவ தலைவர் ராமகிருஷ்ணன், துணை அமைப்பாளர் மணி, மாவட்ட தலைவர்கள் விவேக், ஆபிரகாம், சட்ட ஆலோசகர் சுரேஷ், மாணிக்கம்வாசகம், ஆதிமூலம், ராமலிங்கம், அமைப்பாளர் ராஜ்லெம்பா உதவி தலைவர் பாக்யராஜ், அல்போன்ஸ் உட்பட நிர்வாகிகள் , விவசாயிகள் பங்கேற்றனர்.

