ADDED : நவ 19, 2025 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுசிலாதேவி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துச்சாமி கோரிக்கையை விளக்கி பேசினார்.
மாநிலச் செயலாளர் கணேசன் சிறப்பு செய்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
70 வயதில் 10 சதவீதம் கூடுதல் பென்ஷன் வழங்க வேண்டும். ஓய்வூதியர் அனைவருக்கும் பணமில்லா மருத்துவம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலயுறுத்தப்பட்டது. வட்டச்செயலாளர் ஜோசப் இருதயம் நன்றி கூறினார்.

