ADDED : அக் 29, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம், சிறுவாச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் தினேஷ் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் மக்கள் நல பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மனோகரன், அன்புச்செல்வி, சரவணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர்மலைக்கண்ணன் வரவேற்றார். மாநில தலைவர் செல்லப்பாண்டியன், பொது செயலாளர் புதியவன், பொருளாளர் ரங்கராஜ் பேசினர்.
அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட தலைவர் செந்தில்குமார், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் பங்கேற்றனர்.