/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் ஆர்ப்பாட்டம்
/
திருப்புத்துாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 21, 2026 06:52 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் முதன்மை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் முன்பாக வக்கீல்கள், சர்வ கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்புத்துார் நீதிமன்றத்தில் கூடுதலாக சார்பு நீதிமன்றம் மற்றும் கோட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வேண்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. பார் அசோசியேசன் தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.
அட்வகேட் அசோசியேசயன் தலைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சையது முகமது இப்ராஹிம், அருள் தீபக் மனோரஞ்சன், முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன், மார்க். கம்யூ. ஒன்றிய செயலாளர் முருகேசன், இ.கம்யூ. நகரச் செயலாளர் காளிமுத்து, ம.ம.கட்சி ராஜா, பா.ஜ. முத்துப்பாண்டி, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன், வக்கீல் பழனிச்சாமி, முருகேசன் ஆகியோர் பேசினர். வக்கீல் முகமது ஷெரிப் நன்றி கூறினார்.

