/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் ஆர்ப்பாட்டம்
/
திருப்புத்துாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 26, 2026 07:29 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் மத்திய அரசை கண்டித்து மார்க். கம்யூ.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் விரோதமாக சட்டங்களை அமல்படுத்துவதையும், ஒப்பந்தங்கள் போடப்படுவதையும் கண்டிப்பதாக கூறி ஆர்ப்பாட்டம் நடந்தது. மூத்த உறுப்பினர் சேகர் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் நூர்முகமது முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட குழு உறுப்பினர் பாலு, தாலுகா செயலாளர் முருகேசன்,ஒன்றிய குழு உறுப்பினர்கள் சக்திவேல், சேவுகப் பெருமாள், கல்யாண கண்ணன், பிரம்மன் பங்கேற்றனர்.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதிக்கு வரி இல்லாமலும், ஏற்றுமதிக்கு 18 சதவீத வரியும் விதித்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிப்பதாக கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

