தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புத்துாரில் ஆர்ப்பாட்டம்

திருப்புத்துாரில் ஆர்ப்பாட்டம்

திருப்புத்துாரில் ஆர்ப்பாட்டம்


UPDATED : மே 13, 2026 07:09 PM

ADDED : மே 13, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2026 07:09 PM ADDED : மே 13, 2026 07:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்துார்:திருப்புத்துார் அருகே மருத்துவக்குடிப்பட்டியில் டூ வீலரில் வந்தவர் மீது காரை மோதி இறந்த கொலை வழக்கில் கைது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திருப்புத்துாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மருத்துவக்குடிப்பட்டி ரோட்டில் டூ வீலர் மீது கார் மோதியதில் பிரவீன்குமார் இறந்தார். இறந்தவரின் உறவினர்கள்,வி.சி.க.வின் போராட்டத்திற்கு பின்னர் கொலை வழக்காக கண்டவராயன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். கைது நடவடிக்கையை வலியுறுத்தி குடும்பத்தினர் இறந்தவரின் உடலை வாங்கவில்லை. இந்நிலையில் விசாரணை அதிகாரிகளை கண்டித்தும், கைது நடவடிக்கையை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வி.சி.க.தொகுதி மாவட்டச் செயலாளர் வக்கீல் ராமச்சந்திரன் தலைமையில் திருமயம் மாவட்ட செயலாளர் திலீபன் ராஜ், சிவகங்கை மாவட்ட செயலாளர் விஜயன், மானாமதுரை மாவட்ட செயலாளர் பாலையா, காரைக்குடி மாவட்ட செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us