
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தில் இருந்து, காரணமின்றி ஊழியர்களை வெளியேற்றுவதை கண்டித்து சிவகங்கையில் அகில இந்திய விவசாய தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆதார் எண் இணைப்பை காரணமாக கூறி வேலை உறுதி திட்ட ஊழியர்களை நீக்குவதை தவிர்க்க வேண்டும். பட்ஜெட்டில் சம்பளத்திற்கு குறைந்தது ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி விஸ்வநாதன், முத்துராமலிங்க பூபதி, கருப்பச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.