நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் ஆட்டோ கடனை முழுமையாக கட்டி முடித்தும் மூன்று ஆண்டுகளாக என்.ஓ.சி., வழங்காததை கண்டித்து சி.ஐ.டி.யு.,ஆட்டோ சங்க தொழிலாளர்கள் தனியார் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஆட்டோ சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் வெங்கிட்டு, பொருளாளர் முருகேசன்ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

