
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: அரசு ஐ.டி.ஐ.,க்களில் பணிபுரியும் ஊழியர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழக அளவில் அரசு ஐ.டி.ஐ.,க்களில் பணிபுரியும் அலுவலர்,ஊழியர்களின் 23 அம்ச கோரிக்கை வலியுறுத்தி சிவகங்கை அரசு ஐ.டி.ஐ., முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிளை தலைவர் ராஜா தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் உரை ஆற்றினார். வட்ட கிளை தலைவர் முத்தையா, சத்துணவு ஓய்வூதியர் சங்க மாவட்ட நிதி காப்பாளர் நடராஜன், பிற்பட்டோர் நல விடுதி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளையராஜா, சாலை பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் சதுரகிரி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். நிர்வாகி ராமலட்சுமி நன்றி கூறினார்.